search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட்"

    கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜேசய் ராய் அதிரடியால் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலக்கை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்லர் 13 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.



    ஆனால் தொடக்க வீரர் ஜேசன் ராய் 36 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தா்ர. பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களும், மோயீன் அலி 27 ரன்களும், ஜோ டென்லி 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (3),  குசால் மெண்டிஸ் (1) சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    கேப்டன் திசாரா பெரேரா மட்டும் தாக்குப்பிடித்து 31 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ டென்லி நான்கு விக்கெட்டுக்களும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி அக்டோபர் - நவம்பரில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 6-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுசல் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கணா ஹெராத், மலிண்டா புஷ்பகுமாரா, லக்‌ஷ்மண் சண்டகன் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்னர். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தினேஷ் சண்டிமல் (கேப்டன்), 2. திமித் கருணாரத்னே, 3. கவுசல் சில்வா, 4. குசால் மெண்டிஸ், 5. மேத்யூஸ், 6. டிக்வெல்லா, 7. தனஞ்ஜெயா டி சில்வா, 8. ரோஷன் சில்வா, 9. தில்ருவான் பெரேரா, 10. ரங்கணா ஹெராத், 11. மலிண்டா புஷ்பகுமாரா, 12. சுரங்கா லக்மல், 13. கசுன் ரஜிதா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. லஹிரு குமாரா (உடற்தகுதி பெற்றால்).
    ஆசிய கோப்பை படுதோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. #SLvENG #Mathews
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    படுதோல்வியால் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுமதி அளிக்க வேண்டும்.

    இந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது மேத்யூஸ் காயம் அடைந்தார். அதன்பின் சர்வதேச அணிக்கு திரும்பிய பின்னர் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

    பெரும்பாலான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் அவதிப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மேத்யூஸை யோ-யோ டெஸ்ட் பரிசோதனையில் பாஸ் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேத்யூஸ் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டோல் இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபருடன் மோதிய விவகாரத்தில், கிரிக்கெட்டிற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.



    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. சாம் குர்ரான், 6. டாம் குர்ரான், 7. லியம் டவ்சன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. லியம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. பென் ஸ்டோக்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ், 15. ஒலி ஸ்டோன், 16. மார்க் வுட்.
    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார். #SLvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என கைப்பற்றியது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அலஸ்டைர் குக் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை தேட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை இல்லாமல் திணறி வந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.



    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

    இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.
    ×